திருபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவுக்கு வாக்கு சேகரிப்பு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாம்பரம் பகுதி முன்னணி ஊழியர் கூட்டம் சனிக்கிழமையன்று (மார்ச் 30) நடைபெற்றது. தாம்பரம் பகுதிச் செயலாளர் தா.கிருஷ்ணா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பி னர் ஜி.செந்தில்குமார், 5வது மண்டலக்குழுத் தலைவர் எஸ்.இந்திரன் உள்ளிட்டோர் பேசினர்.