districts

img

பொய் பிரச்சாரம் செய்யும் அதிமுக முன்னாள் அமைச்சர்

திருவண்ணாமலை, ஏப். 10- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், அருகே  புதிய வனச் சாலை அமைப் பதற்கான அரசாணை வெளியிட்டு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது கூட தெரியாமல், அதிமுக முன்னாள் அமைச்சர் பொய்  பிரச்சாரம் செய்துவருவதாக செங்கம் சட்டமன்ற உறுப்பி னர் மு.பெ.கிரி குற்றஞ்சாட்டி னார். திருவண்ணாமலை மக்களவை தொகுதியில்  இந்திய கூட்டணி வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை, அதிமுக வேட்பாளர் கலியபெருமாள், பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன், நாம் தமிழர் கட்சி வேட்பா ளர் ராமேஷ்பாபு மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ள னர். இந்நிலையில், செங்கம் சட்டமன்ற உறுப்பி னர் மு.பெ.கிரி செய்தி யாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகை யில், செங்கம் தாலுகாவில், அரியாகுஞ்சூர் மற்றும் ராமாபுரம் கல்லடாவி கிராமத்திற்கு செல்ல வனப்பகுதியில் சாலை அமைக்கும் திட்டத்தை அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டு புதிதாக  தார் சாலை அமைப்பதற் கான ஒப்பந்தம் கோரப் பட்டுள்ளது. ஆனால், முன்னாள் அமைச்சர், தற்போதைய போளூர் சட்ட மன்ற உறுப்பினர் அக்ரி  கிருஷ்ணமூர்த்தி, மேற்கண்ட சாலை பணி திட்டங்களை பற்றி தெரி யாமல், அதிமுக ஆட்சிக்கு வந்தால் வனப்பகுதியில் சாலை அமைக்கப்படும் என, பொய்யான பிரச்சாரம் செய்து வருவதாக தெரி வித்தார். கிராமப்புற மக்களை ஏமாற்றும் எண்ணத்தில் பொய்யான பிரச்சாரத்தை அக்ரி கிருஷ்ணமூர்த்தி செய்து வருகிறார். எனவே மக்கள் இவர்களை புறக் கணித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.