வேலூர், ஏப். 9 - அரக்கோணம் மக்கள வைத் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஜெகத் ரட்சகன் காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினரும், வேலூர் மாவட்ட திமுக செயலாளரும் ஏ.பி.நந்த குமாருடன் இணைந்து வாக்குசேகரித்தார். சேனூர் ஊராட்சியில் துவங்கி பிரம்மபுரம், சேவூர், திருவலம் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட வேட்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் பேசுகையில், வெள்ளை யர்களிடமிருந்து இந்திய நாட்டை மீட்க நடைபெற்ற சுதந்திர போராட்டத்தை போன்று, 10 பெரும்பணக் காரர்களிட மிருந்து மீண்டும் நாட்டை பாதுகாக்கவும் மோடி அரசை அகற்றிடவும் ஜனநாயக போராட்டக்கள மான இத்தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில் வாக்க ளித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டார். இதில் காட்பாடி ஒன்றிய பெருந்தலைவர் வேல்முரு கன், ஒன்றிய செயலாளர் சரவணன், சேனூர் திமுக கிளை செயலாளர் பஞ்சாட்ச ரம், காங்கிரஸ் மாவட்ட தலைவர் டீக்காராமன், ஜார்ஜ், விசிக, மதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வா கிகள் கலந்து கொண்டனர். முன்னதாக சேனூரில் சிபிஎம் சார்பில் அளித்த வர வேற்பில் மாவட்ட செயலா ளர் எஸ்.தயாநிதி, தாலுகா செயலாளர் ஆர்.சுடரொளி யன், செந்தாமரை, கணேஷ், பழனியப்பன், நவீன், சங்கர் ஆகியோர் பங்கேற்றனர்.