காஞ்சிபுரம், டிச.2 - காஞ்சிபுரம் மாவட்டத்தின் பெரிய ஏரி களில் ஒன்றான உத்திரமேரூர் ஏரியின் மூன்று கலங்கள் வழியாக நீர் வேகமாக வெளியேறி வருகிறது. ஏரிகள் மாவட்டம் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் 381 ஏரிகள் உள்ளது. வடகிழக்கு பருவமழை மற்றும்குறைந்த காற்று தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த ஒரு வார காலமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் கன மழை பெய்தது. உத்திரமேரூர் ஏரி தற்போது முழு கொள்ளளவை எட்ட உள்ளது. ஏரிக்கு தொடர் நீர் வரத்து காரணமாக ஏரி முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நவம்பர் மாதத்தில் காஞ்சிபுரம் வட்டத்தில் 381 மில்லி மீட்டரும், உத்திரமேரூர் 245 மீட்டர், வாலாஜாபாத்தில் 138 மில்லி மீட்டர், திருப்பெரும்புதூரில் 250 மில்லி மீட்டர், குன்றத்தூரில் 500 மில்லி மீட்டர், செம்பரம்பாக்கத்தில் 393 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.