districts

img

கோபாலபுரம் மைதானம்: மாநகராட்சி விளக்கம்

சென்னை,நவ.5- சென்னை  மாநகராட்சி தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-111ல்உள்ள கோபாலபுரம் விளையாட்டு மைதானம் குறித்து மாநகராட்சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்தும் விதமாக இந்த மைதானத்தில் மூன்றில் இரண்டு பங்கு இடத்தில் கிரிக்கெட் விளையாட்டு மைதானம் மேம்பாட்டுப் பணிகளுக்காக ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர்  ந. எழிலன் , தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1.09 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், இப்பகுதியில் உள்ள இளைஞர்கள் குத்துச்சண்டை விளையாட்டுப்பயிற்சி பெறும் வகையில், இந்த விளையாட்டு மைதானத்தில் மூன்றில் ஒரு பங்குபகுதியில் மட்டும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம்குத்துச்சண்டை விளையாட்டுப் பயிற்சி மையம் அமைக்கப்படவுள்ளது.இந்த இரண்டு பணிகளும் முடிவடையும் போது இப்பகுதியில் உள்ள இளைஞர்கள் கிரிக்கெட் மற்றும் குத்துச்சண்டை விளையாட்டுப்பயிற்சி உள்ளிட்ட இதர வகையான விளையாட்டுப் பயிற்சிகளையும்  மேற்கொள்ளும் வகையில் மிகவும் பயனுள்ளதாக அமைந்திடும் என மாநகராட்சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.