districts

img

கழிப்பறை-சுற்றுச்சுவர் இல்லாத அரசுப் பள்ளி

கிருஷ்ணகிரி,செப்.20- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங் கரை வட்டம், பெரியதள்ளபடி அரசு மேல்நிலைப் பள்ளியில் கழிப்பறை வசதி செய்து கொடுக்கப்படவில்லை. இதனால், திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வரும் அவலம் உள்ளது. மேலும், இந்த பள்ளிக்கு சுற்றுச்சுவர் கிடையாது. எனவே,  பள்ளி வளாகம் சமூக விரோதி களின் கூடாரமாக மாறிவிட்டது. இந்த நிலையில், பள்ளி மாணவிகளின் அவல நிலைமை கல்வித்துறை அதி காரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், கழிப்பறை கட்டிக் கொடுக்க வேண்டும் என்றும் உடனடியாக சுற்றுச்சுவர் எழுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்தி அரசு அதிகாரிகளிடம் கொடுத்தனர். இக்கோரிக்கையை ஏற்று சுற்றுச்சுவர் கட்டு வதற்கு, கழிப்பறைகள் கட்டி கொடுப்ப தற்கும் நிதி ஒதுக்கீடு செய்து இரண்டு மாதங்கள் கடந்துவிட்டன. அதிகாரிகளின் மெத்தன போக்கை கண்டித்தும் கட்டுமான பணியை போர்க்கால அடிப்படையில் துவக்க வலி யுறுத்தியும் வாலிபர் சங்கம் சார்பாக பெரிய தள்ளப்பாடியில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  பகுதிச் செயலாளர் மாரிமுத்து தலைமை தாங்கினார். மாவட்டச் செய லாளர் இளவரசன், எத்திராஜ்,லெனின் ஆகியோர் பேசினர்.