districts

img

நெடுஞ்சாலை பணியை விரைந்து முடிக்கக் கோரி நெய்வேலியில் ஆர்ப்பாட்டம்

கடலூர்,ஆக.11-

     கும்பகோணம்- விக்கிர வாண்டி (வி கே டி) நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை பணியை விரைந்து முடிக்கக்கோரி நெய்வேலியில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. சாலைப் பணி 5 ஆண்டு களாக  முடிக்கப்படாமல் தொடர்வதை கண்டித்து விகேடி சாலை போராட்ட குழு சார்பில் நெய்வேலி ஆர்ச் கேட் அருகே ஆர்ப்பா  ட்டம் நடைபெற்றது.

    தலை வர் வி.முத்துவேல் தலைமை தாங்கினார். கோரிக்கை களை விளக்கி நெய்வேலி தொகுதி விசிக துணை செயலாளர் பாட்ஷா பன்னீர், காங்கிரஸ் வடக்குத்து ஊராட்சி தலைவர் அற்புத ராஜ், மதிமுக மாவட்ட பிரதிநிதி மீனாட்சிசுந்தரம், டிடியுசி செயலாளர் வேலு, நிலம், வீடு கொடுத்து பாதிக்கப் பட்டவர்கள் அமைப்பின் தலைவர் ரவிச்சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் ஆர்.பாலமுருகன், வடக் குத்து கிளை செயலாளர் கே.மணி ஆகியோர் பேசி னர். ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து நெய் வேலி சிஐடியு சங்க பொதுச்செயலாளர் எஸ்.திருஅரசு பேசினார்.