அத்தியாவசிய பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும், மாநில அரசு உத்தேசித்துள்ள மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காட்பாடி ஓடை பிள்ளையார் கோவில் அருகிலிருந்து பேரணியும், மின்சார வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இதில் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.பாக்கியம், மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி, மாவட்ட செயற்குழு எம்.பி.ராமச்சந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.கோவிந்தராஜ், எஸ்.பரசுராமன், சி.எஸ்.மகாலிங்கம், பெ.திலீபன், எஸ்.பார்த்திபன் ஆகியோர் பேசினர்.
அத்தியாவசிய பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும், மாநில அரசு உத்தேசித்துள்ள மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டச் செயாளர் செயலாளர் எம்.காசி தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சக்திவேல், மாவட்டக் குழு உறுப்பினர் ஜாபர் சாதிக் உள்ளிட்டோர் பேசினர்.