districts

img

40 அடி பள்ளத்தில் சிக்கியவர்களின் உடல்கள் மீட்கப்படுவதில் தாமதம்

சென்னை, டிச.6 - மிக்ஜம் புயல் காரண மாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஞாயிறு முதல் திங்கள் கிழமை இரவு வரை கனமழையுடன்  பலத்த காற்று வீசியது.  இந்நிலையில் திங்கள் கிழமை சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் பகுதியில் ஒரு  தனியார் கட்டுமான நிறுவனம் வேலை நடை பெற்றுக்கொண்டிருந்தது. அதன் அருகில் ஒரு பெட்ரோல் பங்க் இயங்கி வந்தது. கட்டுமான வேலைக் காக அருகில் ஒரு கண்டெய் னர் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது. திடீரென  கட்டுமான வேலை நடை பெற்றுக்கொண்டிருந்த இடத்தில் பெரிய பள்ளம்  ஏற்பட்டு சுமார் 50 அடி ஆழத் திற்கு பள்ளம் ஏற்பட்டது. இந்த பள்ளத்தில் பெட்ரோல் பங்க்-ல் வேலை பார்த்த சிலர் சிக்கிக்கொண்டனர். சுதாரித்துக்கொண்ட ஒரு  சிலர் தப்பித்தனர். கட்டு மான நிறுவனத்தில் வேலை  பார்த்த ஜெயசீலன் (வயது  29) கண்டெய்னர் உடன்  தண்ணீருக்குள் மூழ்கினார்.   இன்னும் சிலர் சிக்கியிருக்க லாம் என கருதப்படுகிறது. சென்னை எங்கும் வெள் ளக்காடாக காட்சியளித் த்ததால் உடனடியாக மீட்க முடியாத நிலை ஏற்பட்டது.

ஜெயசீலன் சிக்கிக்கொண்டதை கேள்விப்பட்ட அவரது மனைவி மஞ்சு, குடும்பத்தி னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஜெய சீலனுக்கு திருமணமாகி 9 மாதங்களே ஆகிறது. மீட்பு பணிக்கு ஆட்களை தேடியபோதிலும் மீட்கும் வகையில் போதுமான அதிகாரிகள் வரவில்லை என தெரிகிறது.இதுகுறித்து ஜெயசீலன் உறவினர்கள் கூறும்போது, செல்போன் மூலம் ஜெயசீலனுக்கு அழைப்பு வந்தது. ஜென ரேட்டர் இயக்க வேண்டும், உடனடியாக வேலைக்கு வரும்படி அழைத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற ஜெயசீலன் ஜென ரேட்டரை ஆபரேட் செய்த பின் கடும் மழை பெய்து வந்ததால்மழைக்கு கண்டெய்னரில் ஒதுங்கிய தாக தெரிகிறது. அப்போது தான் கண்டெய்னர் தண்ணீ ருக்குள் மூழ்கியதாக கூறப் படுகிறது.சுமார் 50 அடி  ஆழமுள்ள அந்த பள்ளத்தி லிருந்து தண்ணீர் அனைத் தும் வெளியேற்றிய பிறகு தான் அவரது உடல் மீட்கப் படும் என  தெரிகிறது. இந்நிலையில் விபத்து நடந்த பகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் புதன்கிழமை மாலை பார் வையிட்டார். தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர். வேல்முருகன்,  மாநிலக்குழு  உறுப்பினர் இரா.சிந்தன்,  செயற்குழு உறுப்பினர் கள் வனஜகுமாரி, சித்தர கலா வேளச்சேரி பகுதி செய லாளர் ரபிக் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.