districts

      கடலூர் குவியல் குவியலாக ஆற்று மணல்

கடலூர், ஆக.18-

      கடலூர் அடுத்த இரண்டாயிரம் விளாக பகுதியில் தென்பெண்ணை யாறு உள்ளது. இந்த பகுதி யில்  மணல் திருடிச்சென்று குவியல் குவியலாக கொட்டி வைக்கின்றனர். பின்னர் வாகனங்கள் மூலம் மணல் கடத்தப்பட்டு வருவதாகவும் தூக்கணாம் பாக்கம் காவல்துறையின ருக்கு தகவல் கிடைத்தது.  

    இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மினி லாரிகள் பிடிக்க முயன்ற னர். அப்போது, சிலர் முற்று கையிட்டு கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பிறகு, லாரிகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.