சென்னை, மார்ச் 3 - கடலூர் துணை மேயர் வேட்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ப.தாமரைச்செல்வன் அறிவிக்கப்பட்டுள்ளார்.மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக் கப்பட்ட பதவியிடங்களுக் கான வேட்பாளர்ர்களை அந்தக் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார். அதன் விவரம் வருமாறு: நகராட்சி தலைவர் பதவிக்கு சுமதி சிவக்குமார் (ஜெயங் கொண்டம்), கிரிஜா திருமாறன் (நெல்லிகுப்பம்), துணைத்தலைவர் பதவிக்கு ராஜலட்சுமி வெற்றிவேல் (திண்டிவனம்), பிரேம்குமார் (பெரியகுளம்), சீ.மா.ரமேஷ்கர்ணா (ராணிப் பேட்டை), பேரூராட்சி தலைவர் பதவி க்கு ஆதலட்சுமி ஆற்றலரசு (பெண்ணாடம்), குமார் (காடையாம்பட்டி), சின்னவேடி (பொ.மல்லாபுரம்), ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.