districts

img

டி.ஆர்.பாலுவுக்கு வாக்கு கேட்டு சிபிஎம் ஊழியர்கள் தீவிர பிரச்சாரம்

சென்னை, ஏப். 7 - திருபெரும்புதூர் மக்க ளவைத் தொகுதியில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு போட்டியிடுகிறார். அவருக்கு வாக்கு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள னர். வேட்பாளர் டி.ஆர்.பாலு  தினசரி திறந்த வாக னத்தில் காலை, மாலை நேரங்களில் கூட்டணி கட்சியினருடன் ஊர்வ லமாக சென்று வாக்கு  சேகரித்து வருகிறார்.  இந்தியா கூட்டணி கட்சியி னர் வட்டம், ஊராட்சி வாரியாக காலை, மாலை நேரங்களில் வீடு வீடாக சென்று துண்டு பிர சுரங்களை கொடுத்து வாக்கு சேகரிக்கின்றனர். மேலும், வேட்பாளரை ஆதரித்து கூட்டணி கட்சி யின் முன்னணி தலை வர்கள் தொகுதி முழுவதும் நடைபெறும் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்று வாக்கு சேகரித்து வருகின்றனர். மக்களிடையே சித்தாந்த பிரச்சாரத்தை கூர்மைப்படுத்தும் வகை யில், ஒன்றிய பாஜக அரசை யும், அதிமுகவையும் அம்பலப்படுத்தி, மாற்று திட்டங்களை வலியுறுத்தும் ‘காவி இருளை விலக்கி அறிவு ஒளியை உதிக்கச் செய்வோம்’, ‘வெறுப்பு அரசியலுக்கு முடிவு கட்டு வோம்’ எனும் இரண்டு பிரசுரங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளி யிட்டுள்ளது. மேலும், பாஜக அரசின் கொடுங் கோன்மையை விளக்கும் துண்டு பிரசுரத்தையும் வெளியிட்டுள்ளது. கிளைவாரியாக குழுக்கள் அமைத்து இந்த பிரசுரங்கள், துண்டு அறிக்கைகளை வீடு வீடாக சென்று கொடுத்து மக்க ளோடு மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் விவாதிக்கின்ற னர். வாக்காளர்களின் வாக்குகளை இந்தியா அணிக்குத்தான் என்பதை உறுதி செய்து வரு கின்றனர்.