அரக்கோணம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் எஸ். ஜெகத்ரட்சகனை ஆதரித்து சிபிஎம் வாலாஜா தாலுகாவிற்குட்பட்ட வள்ளலார் பெண்கள் கிளை சார்பில் கிளை செயலாளர் பார்வதி தலைமையில் திங்களன்று (ஏப். 15) வள்ளலார் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு இயக்கம் நடைபெற்றது. இதில் மாவட்ட குழு உறுப்பினர் என். ரமேஷ், வாலாஜா தாலுகா செயலாளர் ஆர். மணிகண்டன், ராணிப்பேட்டை கிளை செயலாளர் ஜி. குணசேகரன், தாலுகா குழு உறுப்பினர்கள் செந்தில், கீதா உள்ளிட்ட பலர் வாக்கு சேகரிப்பு இயக்கத்தில் கலந்து கொண்டனர்.