districts

img

பொது சிவில் சட்டம் கொண்டு வந்தால் சிபிஎம் கடுமையாக எதிர்க்கும்

கடலூர், அக்.8- அனைத்து மதத்தின ருக்குமான பொது சிவில் சட்டத்தை பாஜக அரசு கொண்டு வந்தால் மார்க்சிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்க்கும் என்று நெய்வேலி கூட்டத்தில் ஜி ராமகிருஷ்ணன் தெரி வித்தார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில்  சிவில் சட்ட விளக்க பொதுக்கூட்டம் நெய்வேலி ஆர்ச் கேட்டில் நடைபெற்றது. நகரச் செயலாளர் ஆர். முருகன் தலைமை தாங்கி னார். அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார். மாவட்டச் செய லாளர் மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.ஆறுமுகம், எஸ். திரு அரசு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் டி. ஜெய ராமன், எம். சீனிவாசன், வி.மேரி, பி. மாதவி, எம்.தண்டபாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.  ஜி.ராமகிருஷ்ணன் பேசியது வருமாறு:- தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, பொது சிவில் சட்டம் கொண்டு வரு வோம் என்றார். இரண்டு பேர் உள்ள ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு ஒரு சட்டம், மற்றொருவருக்கு வேறு ஒரு சட்டம் என்று இரண்டு சட்டங்கள் இருந்தால் அந்த குடும்பம், சமூகம் எப்படி செயல்பட முடி யும்? இதற்காக தான் அரசி யல் நிர்ணய சபையில் விவாதிக்கும் போது அனைவருக்கும் பொது வான சட்டத்தை கொண்டு வர முடியாது என்று அம்பேத்கர் முடிவு எடுத்தார். இஸ்லாம், இந்து,

கிறிஸ்துவம், சீக்கியம், பாரசீகம் என்று பல்வேறு சமூகங்கள் இருக்கும் போது அனைவருக்கும் ஒரே சட்டம் கொண்டு வரு வோம் என்பது சாத்திய மற்றது. ஆனால், பிரதமர் மோடி ஒரே சட்டம் கொண்டு வருவோம் என்றார். இந்துக்களுக்கு தனி யாக குடும்ப சட்டம் உள்ளது. இஸ்லாமியர்களுக்கு தனியாக குடும்ப சட்டம் உள்ளது. சிறப்பு திருமண சட்டம் இருக்கிறது. ஆனால், ஒன்றிய பாஜக அனைவருக்கும் பொது வான ‘காமன் சிவில்’ சட்டம் உருவாக்க 2016 ஆம் ஆண்டு சட்ட ஆணை யத்தை நியமித்தது. தொடர்ந்து பல கூட்டங்களை நடத்தியது. 75 ஆயிரம் பேர் மனுக் கள் கொடுத்தனர். இதை ஆலோசனை செய்த ஆணையம் இது தேவையற்றது, விரும்பத்தகாதது என்று அறிவித்துள்ளது.  இந்த நிலையில்தான், மீண்டும் ஒரு குழுவை அமைத்து பொது சிவில் சட்டம் தேவை என்று பாஜக அரசு அறிக்கை அளித்துள்ளது. குறிப்பாக இந்து மதத்தில் எல்லோருக்கும் பொதுவான சட்டம் கிடையாது. பட்டியலி னம், பழங்குடி மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், முற்படுத்தப் பட்ட மக்கள் அனை வருக்கும் தனித் தனியாக சட்டம் உள்ளது. அனைத் தையும் ஒன்றிணைத்து பொது சட்டம் கொண்டு வர முடியாது. இஸ்லாமியர்களின் குடும்ப சட்டத்தை மாற்று வதற்கு தான் பொது சிவில் சட்டத்தை கொண்டு வரு கிறோம் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்கிறார்.  மக்களைப் பிளவுபடுத்தி இஸ்லாமியர்களை தனிமைப்படுத்த இந்த சட்டம் கொண்டு வர முயற்சிக்கிறார். பழங்குடி மக்கள் 100 ஆண்டுகளுக்கு மேலாக கொண்டுள்ள அவர்களின் பழக்க வழக்கங்கள் மாற்ற கூடாது என்று அரசியல் சட்டம் சொல்கிறது.  பொது சிவில் சட்டத்தை கொண்டு வந்தால் மார்க்சிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்க்கும். இவ்வாறு அவர் பேசி னார்.