districts

img

சிபிஎம் விருகம்பாக்கம் பகுதி முன்னணி ஊழியர் கூட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருகம்பாக்கம் பகுதி முன்னணி ஊழியர் கூட்டம் ஞாயிறன்று (மார்ச் 31) எம்ஜிஆர் நகரில் நடைபெற்றது. இந்தியா கூட்டணி சார்பில் தென்சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்  த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியனுக்கு தேர்தல் பணியாற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது. பகுதிச் செயலாளர் இ.ரவி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசினார். திமுக சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன், ஏ.எம்.வி.பிரபாகரராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர் க.தனசேகரன், சிபிஎம் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் ச.லெனின், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சி.செங்கல்வராயன், எம்.ரெங்கசாமி, திமுக பகுதி நிர்வாகிகள் கே.கண்ணன், மு.ராசா உள்ளிட்டேர் கலந்து கொண்டனர்.