மக்களவைத் தேர்தலில் வட சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு வாக்கு கேட்டு சிபிஎம் சார்பில் ராயபுரத்தில் நடைபெற்ற இருசக்கர வாகன பிரச்சாரத்தை திமுகவின் பகுதிச் செயலாளர் இரா.லட்சுமணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், செயற்குழு உறுப்பினர் ஆர்.லோகநாதன்,பகுதிச் செயலாளர் வெ.ரவிக்குமார், மாமன்ற உறுப்பினர் பா.விமலா, நிர்வாகிகள் சேகர், ஜெயச்சந்திரன், ஜெயன், விஜய், ஷாஜகான், திமுக வட்டச் செயலாளர் நாகராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.