சென்னை, ஆக. 28 - மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுர வாயல் பகுதிக்குழு அலு வலகமான ‘வி.பி.சிந்தன் நினைவகம்’ ஞாயிறன்று (ஆக.28) திறக்கப்பட்டது. கட்சியின் பகுதிச் செய லாளர் வி.தாமஸ் தலைமை யில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அலுவலகத்தை மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் திறந்து வைத்தார். தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் தலை வர்களின் படத்தையும், செயற்குழு உறுப்பினர் ஏ.பாக்கியம் ‘உ.ரா.வரதரா சன் நினைவு நூலகத்தை யும்’ திறந்து வைத்தனர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.சரவணசெல்வி ஆகியோர் செங்கொடியை ஏற்றி வைத்தனர். வானகரம் கிளைச் செயலாளர் ஜி.ஜானகிராமன் நன்றி கூறினார். முன்னதாக பகுதிக்குழு உறுப்பினர் ஆர்.பாலசுப்பிரமணியம் வரவேற்றார். அலுவலக முகவரி: எண்.23ஏ, திருவள்ளுவர் 1வது தெரு, மேட்டுகுப்பம், வானகரம், சென்னை-95.