districts

img

மண்ணாடிபட்டு கொம்யூனில் சிபிஎம் பிரச்சாரம்

புதுச்சேரி மக்களவைத் தொகுதி  காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு வாக்கு கேட்டு சிபிஎம்  மண்ணாடிபட்டு கொம்யூன் கமிட்டி சார்பில் திருவண்டார்கோவில், திருபுவனை மதகடிப்பட்டு, பி.எஸ். பாளையம், திருக்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் கொம்யூன் செயலாளர் இரகு. அன்புமணி தலைமையில் மாநிலச் செயலாளர் ராஜாங்கம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் சீனுவாசன், பிரபுராஜ், மாநில குழு உறுப்பினர்கள் சங்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். புதுவை சப்தர் ஹஸ்மி கலைக்குழுவின் அரசியல் விழிப்புணர்வு பாடல்கள் இசைக்கப்பட்டன.