திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கள்ளிக்குப்பம் பகுதியில் வாக்கு சேகரிக்கப்பட்டது. மாவட்டக்குழு உறுப்பினர் சி.சுந்தரராஜ், கிளைச் செயலாளர் இ.பாக்கியம், நிர்வாகிகள் பொன்னுசாமி, குமார், ஜோதிமணி, திமுக வட்டச் செயலாளர் சுந்தர்ராஜ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி கட்சியினர் கலந்து கொண்டனர்.