districts

img

அரக்கோணம் கலவை வட்டத்தில் சிபிஎம் பிரச்சாரம்

அரக்கோணம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் எஸ். ஜெகத்ரட்சகனை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கலவை தாலுக்கா குழு சார்பில் கலவை வட்டார செயலாளர் எஸ். கிட்டு தலைமையில் திங்களன்று (ஏப். 15) மாம்பாக்கம் கூட்ரோடில் வாக்கு சேகரிப்பு இயக்கம் நடைபெற்றது. இதில் மாவட்ட குழு உறுப்பினர்கள் பி. ரகுபதி, கே. சேகர், வட்டார குமு உறுப்பினர்கள் என்.ஆதிமூலம், எஸ். விஜயா, கிளை செயலாளர் ஆர். தனசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.