districts

img

பெரியார் கல்லூரியில் கலந்தாய்வு தொடங்கியது

கடலூர், மே 31- கடலூர் தேவனாம்பட்டினத்தி லுள்ள பெரியார் அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்ற னர். இந்த கல்லூரியில் 2023-24ஆம் கல்வியாண்டுக்கான இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு புதனன்று (மே 31) தொடங்கியது. கல்லூரி முதல்வர் ஜோதி வெங்க டேஸ்வரன் தலைமை தாங்கினார். பேராசிரியர்கள் சாந்தி ராமகிருஷ்ணன், ராஜ்குமார், மைக்கேல், பிரகாஷ், சர்மிளா ஆகியோர் மாணவர்களின் சான்றிதழ்களை சரி பார்த்து கலந்தாய்வு நடத்தினர். இதில் முதற்கட்டமாக மாற்றுத்திற னாளிகள், விளையாட்டு வீரர்கள், தேசிய மாணவர் படை, முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் மற்றும் அந்தமான் நிக்கோபாரை சேர்ந்த தமிழர்கள் போன்றோருக்கான 3 விழுக்காடு சிறப்பு ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதி களில் இருந்து வந்திருந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்தாய்வில் கலந்து கொண்டனர். இதில் பேராசிரியர்கள் சேதுராமன், அருள்தாஸ், கண்ணன், குமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து வரும் 3ஆம் தேதி கணிதம், புள்ளியியல், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், தொழில்முறை வேதியியல், தாவர வியல், விலங்கியல், நுண்ணுயிரியல், உளவியல், காட்சி தகவலியல், கணினி பயன்பாட்டியல் போன்ற பாடங்களுக்கு மட்டும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

;