திருவள்ளூர், ஏப். 1- திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் திங்களன்று (ஏப் 1) பொன்னேரி அருகில் உள்ள மாதவரத்தில் வாக்குசேகரித்தார். இந்த பிரச்சாரத்தின் போது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. நீண்ட நாள் கோரிக்கையான திருவள்ளூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்றை நிறுவ வேண்டும், அதானி துறை முகத்தை ரத்து செய்ய வேண்டும், பொன்னேரி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும், ஊத்துக்கோட்டையில் வாசனை திரவ தொழிற்சாலை அமைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் மனுவில் வலியுறுத்தப்பட்டது. இந்த மனுவை பிரச்சாரத்திற்கு வந்த மக்கள் மத்தியில் அனைத்து கோரிக்கை களையும் வாசித்து விட்டு, இந்த நியாய மான கோரிக்கைகள் நிச்சயமாக நிறை வேற்ற பாடுபடுவேன் என வேட்பாளர் உறுதியளித்தார். அப்போது பொது மக்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்து வரவேற்றனர். இதனை தொடர்ந்து சோழவரம் வடக்கு ஒன்றியம்மாதவரம், நெடு வரம்பாக்கம்,தச்சூர் கூட்டுசாலை, ஆண்டார்குப்பம், பஞ்சட்டி, அருமந்தை கூட்டுசாலை, ஞாயிறு, பெரியமுல்லை வாயல், சீமாவரம், திருநிலை, வழுதிகை மேடு,மீஞ்சூர் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மணலி புதுநகர், நந்தியம்பாக்கம், நாப்பாளையம், கல்பாக்கம், வெள்ளி வாயல்சாவடி, கொண்டக்கரை, வாயலூர், மீஞ்சூர் டவுன், மேலூர், நாலூர், வல்லூர், சிறுவாக்கம், தட்பெரும்பாக்கம் ஆகிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டனர். வேட்பாளருக்கு பொது மக்கள் வழிநெடுக்கிலும் மலர் தூவி, ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். திமுக கிழக்கு மாவட்டச் செய லாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற இப்பிரச்சாரத்தில், வாசனை திரவி யம் தொழிற்சாலை அமைப்பது தொடர்பாக ஏற்கெனவே சட்டமன்றத்தில் பேசி யுள்ளேன். வாலிபர் சங்கத்தின் கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதியை அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தொகுதி பொறுப்பாளர் கிரிராஜன், பொன்னேரி சட்டமன்றத் உறுப்பினர் துரை.சந்திரசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் டி.பன்னீர்செல்வம், கே.விஜயன், ஒன்றிய செயலாளரும் ஞாயிறு ஊராட்சி மன்ற தலைவருமான ஜி.வி.எல்லையன் (சோழவரம்), எஸ்.இ.சேகர் (பொன்னேரி), இ.ஜெயவேல் (மீஞ்சூர்), இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் டி.மதன், மாவட்டத் தலைவர் எஸ்.கலையரசன், விசிக மாவட்டச் செய லாளர் நீலமேகம், காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகள் வழக்கறிஞர் சம்பத், சிதம்பரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.