districts

img

வேலூர் விஐடியில் கணினி நுழைவுத் தேர்வு

வேலூர், ஏப்.29 - விஐடியில் ( வேலூர், சென்னை, ஆந்திர  பிரதேசம் ( அமராவதி ), போபால்)  பி.டெக் பட்டப்படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு (VITEEE-2024) ஏப்.19 அன்று துவங்கி,  30 ம் தேதி  நிறைவடைகிறது. இத்தேர்வு இந்தியாவில் 125 நகரங்களி லும் மற்றும் துபாய், மஸ்கட், கத்தார், குவைத்,  சிங்கப்பூர், கோலாலம்பூர் உள்ளிட்ட நாடு களில் கணினி முறையில் நடைபெறுகிறது. நுழைவுத்தேர்வு முடிவுகள் மே.3 அன்று,  www.vit.ac.in என்ற இணையதளத்தில்  வெளியிடப்பட்டு, அன்றைய தினமே  கலந்தாய்விற்கான செயல்முறை  துவங்கு கிறது.  உயர்மதிப்பெண் (ரேங்க் 1லட்சம்)  எடுத்த மாணவர்கள்  விஐடி வேலூர், சென்னை, ஆந்திர பிரதேசம், போபால் ஆகிய 4 வளாகங்களில் மாணவ, மாணவி கள்  தங்களுக்கான பாடப் பிரிவுகளை தேர்வு (ரேங்க் அடிப்படையில்)  செய்து  கொள்ளலாம். முதல் கட்ட கலந்தாய்வு ( 07-5-2024 - 08-05-2024) ரேங்க் 1 முதல்  20,000 வரை இரண்டாம் கட்ட கலந்தாய்வு (18-5-2024 - 19-5-2024)  ரேங்க் 20,001 முதல்  45ஆயிரம், மூன்றாம் கட்ட கலந்தாய்வு (29-5-2024 -  30-5-2024) ரேங்க் 45,001 முதல் 70ஆயிரம், நான்காம் கட்ட கலந்தாய்வு (09-6-2024 - 10-6- 2024) ரேங்க் 70,001 முதல்  1,00,000  நடைபெறும். ரேங்க் 1,00,000  மேல் எடுத்த மாணவ   மாணவியர்களுக்கு விஐடி ஆந்திரபிரதேசம் மற்றும் விஐடி போபாலில் மட்டுமே இடம் கிடைக்கும்.   இவர்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வு (20-06-2024 மற்றும் 21-06-2024)   ஆகிய தேதிகளில் நடைபெறும்.மாணவ, மாணவியர்களுக்கான வகுப்புகள் ஜூலை இரண்டாவது வாரத்தில் இருந்து  தொடங்குகிறது . ஜிவி பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ்  சிறப்பு கல்வி உதவி (Scholar ship under GV School Development Programme) விஐடி பல்கலைக்கழகத்தின்  ஜிவி பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ்  விஐடி நுழைவுத்தேர்வில் 1 முதல் 10  ரேங்குக்குள் தகுதி பெறும் மாணவ,  மாணவியருக்கு பி.டெக் படிப்பு பயிலும் 4 ஆண்டுகள் முழுவதும் 100 விழுக்காடு  படிப்பு  கட்டண சலுகை வழங்கப்படுகிறது. அத்துடன் விஐடி நுழைவுத்தேர்வில் 11 முதல் 50 ரேங்குக்குள் தகுதி பெறும் மாணவ, மாணவியருக்கு75 விழுக்காடு படிப்பு  கட்டண சலுகையும் 51 முதல் 100  ரேங்குக்குள் தகுதி பெறும்  மாணவ, மாணவியருக்கு 50 விழுக்காடு படிப்பு  கட்டண  சலுகையும் 101 முதல் 500 ரேங்குக்குள் தகுதி பெறும்  மாணவ, மாணவியருக்கு 25 விழுக்காடு படிப்பு  கட்டண சலுகையும்  4 ஆண்டுகள் முழுவதும் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு, ஆந்திரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தில் உள்ள கிராமப்புற பகுதிகளை சேர்ந்த ஏழை, எளிய மாணவர்களும் விஐடி பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி  பயிலும் வகையில் செயல்படுத்தப்பட்டு  வரும் ஸ்டார்ஸ் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு  மாவட்டத்திலும் மாவட்ட அளவில் +2  தேர்வில் முதலிடம் பெறும் மாணவ,  மாணவியருக்கு 100 விழுக்காடு படிப்பு கட்டண  சலுகையுடன் அவர்களுக்கு உணவு  மற்றும் விடுதி வசதியுடன் விஐடி பல்கலைக் கழகத்தில் இலவச சேர்க்கை  வழங்கப் படுகிறது.