மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சியின் ஸ்தாபக தலைவர், இந்திய விடுதலை போராட்ட வீரர், மறைந்த தோழர் என்.சங்கரய்யா படத்திறப்பு விழா புதுச்சேரியில் சனிக்கிழமையன்று நடைபெற்றது. அஞ்சலி கூட்டத்திற்கு சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.சீனுவாசன் தலைமை தாங்கினார். தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் என்.சங்கரய்யாவின் உருவப்படத்தை திறந்து வைத்தார். மாநில செயலாளர் ஆர்.ராஜாங்கம்,மூத்த தலைவர் முருகன்,மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், ராமச்சந்திரன், தமிழ்ச்செல்வன், பிரபுராஜ்,கொளஞ்சியப்பன்,சத்தியா, கலியமூர்த்தி உட்பட திரளானோர் பங்கேற்று என்.சங்கரய்யா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.