districts

img

புதுச்சேரியில் 10 லட்சம் வாக்காளர்கள்

புதுச்சேரி, அக்.27- புதுச்சேரியில்  மொத்த வாக்காளர்கள் 10,07,179 பேர் உள்ளதாக வரைவு வாக்காளர்கள் பட்டியலை வெளியிட்டு ஆட்சியர் வல்லவன் தெரிவித்தார். புதுச்சேரி யூனியன் பிரதேசம் புதுச்சேரி, மாகி, ஏனாம் ஆகிய பிராந்தியங்கள் ஒரு மாவட்டமாகவும், காரைக்கால் ஒரு மாவட்டமாகவும் மொத்தம் இரண்டு மாவட்டங்கள் உள்ளது. இவை அனைத்திற்கும் சேர்த்து வரைவு வாக்காளர் பட்டியல் வெள்ளிக்கிழமை (அக்.27) வெளியிடப்பட்டது. புதுச்சேரிக்கு ஆட்சியர் வல்லவனும், காரைக்கால் மாவட்டத்திற்கு ஆட்சியர் குலோத்துங்கனும் தனித்தனியாக பட்டியல்களை வெளியிட்டனர். புதுச்சேரியில் ஒட்டுமொத்தமாக 10,07,179 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களைக் காட்டிலும் 60 ஆயிரம் பெண்கள் அதிகம் உள்ளனர். தற்போது வெளியிட்ட பட்டியலின்படி ஆண் வாக்காளர்கள் 4,73,354, பெண் வாக்காளர்கள் 5,33,680 ஆகும். மூன்றாம் பாலினத்தவர்கள் 145 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பெயர் சேர்த்தல் முன்னதாக அங்கீகரிக்கப்பட்ட அரசி யல் கட்சி தலைவர்களுடன் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வல்லவன் வழங்கினார். அதேப்போல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் ஆகியவை வரும் டிசம்பர் 9 வரை நடைபெறுகிறது. இதில் சிறப்பு முகாம் நவம்பர் 4,5,18,19 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதை வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ள லாம் என்று மாவட்ட ஆட்சியர் செய்தி யாளர்களிடம் தெரிவித்தார்.