கிருஷ்ணகிரி,பிப்.10- உரித்த தேங்காய் கிலோ ரூ. 50க்கும்,கொப்பரை தேங்காய் கிலோ ரூ. 140 க்கும் தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்ய வேண்டும், தென்னை விவசாயிகளுக்கு மாநில அரசு ஊக்கத்தொகை வழங்க வேண்டும், தென்னை மரம் ஏறும் தொழிலாளர்கள் விபத்து காப்பீடு வழங்க வலியுறுத்தி தென்னை விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் காவேரிப்பட்டணத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தென்னை விவசாயம் சங்க மாவட்டத் தலைவர் சின்னசாமி, விவ சாய தொழிலாளர் சங்க தலைவர் ராஜா, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பிரகாஷ், தென்னை விவ சாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராஜா, மாநிலக் குழு உறுப்பினர் லெனின் கடல் வேந்தன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.