கடலூர்,மே.20-
உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளை நிலைநாட்டி தமிழகத்தில் 7 முனைகளி லிருந்து சிஐடியு சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நடை பயண பிரச்சாரம் தொடங்கி யுள்ளது.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும், நிரந்தரத் தன்மை வாய்ந்த பணிகளில் ஒப்பந்த முறையை எதிர்த்தும், தொழிற்சாலை சட்டதிருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி யும், இந்த நடைபயண பிரச்சாரம் நடைபெறுகிறது.
சனிக்கிழமை தொடங்கி மே 30 ஆம் தேதி சிஐடியு அமைப்பு தினத்தன்று திருச்சியில் இந்த பிரச்சார பயணம் நிறைவு செய்யப்படு கிறது. கடலூரில் தொடங்கிய நடைபயண பிரச்சாரத் திற்கு மாநில உதவி பொதுச் செயலாளர் திருச்செல்வம் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் சி.ஜெய பால், கடலூர் மாவட்ட செயலாளர் டி.பழனிவேல், தஞ்சாவூர் மாவட்ட தலைவர் எம். கண்ணன், திருவாரூர் மாவட்ட செயலாளர் டி. முருகையன், நாகை மாவட்ட செயலாளர் கே, தங்கமணி, மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பி. மாரியப்பன், அரியலூர் மாவட்டச் செயலாளர் பி.துரைசாமி, கடலூர் மாவட்டத் தலைவர் பி. கருப் பையன், மாவட்ட துணைத் தலைவர் ஜி. பாஸ்கரன், நிர்வாகிகள் வி.சுப்பராயன் ஜெ.ராஜேஷ் கண்ணன், திருமுருகன், ஸ்டாலின், சிபிஎம் மாவட்ட செயலாளர் கோ.மாதவன் மாநகர செய லாளர் ஆர்.அமர்நாத் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பிரச்சாரப்பயணம் பெரியார் டெப்போவில் புறப்பட்டு பாரதி சாலை செம்மண்டலம் சாவடி கோண்டூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி நெய்வேலி வழியாக நடை பயணமாக கோரிக்கைகளை வலி யுறுத்தி பிரச்சாரம் மேற் கொண்டனர். நிகழ்ச்சியில் புதுவை சப்தர் ஹஸ்மி கலைக்குழுவின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.