districts

img

குரோம்பேட்டை சரவணா ஸ்டோரில் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு

தாம்பரம், ஜன.8- குரோம்பேட்டை பகுதியில் கொரோனா அசுர வேகத்தில் பரவி வருகிறது. இங்கு பொது மக்கள் மட்டும் இன்றி மாணவர்கள், கடை ஊழி யர்களையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. குரோம்பேட்டை பகுதியில் இயங்கி வரும் பிரபல ஜவுளிக்கடையில் பணிபுரியும் ஊழியர்கள் தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குரோம்பேட்டையில் உள்ள சரவனா ஸ்டோர் கடையில் 400க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 22 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரி யவந்தது. இதையடுத்து அவர்கள் சென்னையில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கொரோனா பரவாமல் தடுக்க அந்த ஜவுளிக்கடை தற்காலிகமாக மூடப்பட்டது. இதேபோல் குரோம்பேட்டையில் இயங்கி வரும் மற்றொரு பிரபலமான ஜவுளிக்கடை ஊழியர்கள் 250 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி அந்த ஜவுளிக்கடையும் தற்காலிகமாக மூடப்பட்டது. அடுத்தடுத்து 2 ஜவுளிக்கடைகளில் கொரோனா பரவியதால் குரோம்பேட்டை மக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. கல்லூரி விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் 1,850 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில்  மொத்தம் 142 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலான மாணவர்கள் விடுதிகளை காலி செய்து விட்டு  சொந்த ஊருக்கு சென்று விட்டனர். 40 மாண வர்கள் மட்டும் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கிழக்கு தாம்பரத்தில் உள்ள கிறிஸ்தவ கல்லூரி  மாணவர்களில் 22 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது ஏற்கனவே தெரியவந்தது. தற்போது மேலும் 38 மாணவர்கள் கொரோனாவால் பாதிக் கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதில் எத்தனை பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருக்கிறது என்பது தெரிய வரும். குரோம்பேட்டை பகுதியில் வே கமாக பரவி வரும் கொரோனாவை தடுக்க தீவிர  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. பொது மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள் மற்றும் அதிக ஊழியர்கள் பணி புரியும் நிறுவனங்களில் கொரோனா பரிசோதனை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. பொது மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அறிவுத்தப்பட்டுள்ளனர்.

;