சென்னை சென்ட்ரல் பகுதியில் , மெட்ரோ ரயில் நிறுவனத்தால் செயல்படுத்தப்படும் உலகத்தரம் வாய்ந்த பன்முக போக்குவரத்து ஒருங்கிணைப்புத் திட்டமான மத்திய சதுக்கத் திட்டத்தின் கீழ் ரூ12.49 மதிப்பீட்டில் அழகுபடுத்தப்பட்ட நில மேம்பாட்டு வசதிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதனன்று (மார்ச் 30) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், தயாநிதி மாறன் எம்பி, மெட்ரோ ரயில் மேலாண்மை இயக்குநர் பிரதீப்யாதவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.