districts

சென்னை விரைவு செய்திகள்

வழிப்பறியில் ஈடுபட்ட  மாணவர் கைது

கூடுவாஞ்சேரி, ஆக.9-  கூடுவாஞ்சேரியில் வழி பறியில் ஈடுபட்ட பள்ளி மாணவன் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பைக், கத்திகள், செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கூடுவாஞ்சேரி அடுத்த தங்கப்பாபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலுசாமி (45). இவர் கடந்த 6ம் தேதி இரவு கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்தில் திருச்சிக்கு செல்வதற்காக பஸ் ஏற காத்திருந்தார். அப்போது, அந்த வழியாக 2 பைக்குகளில் வந்த 5 பேர் கொண்ட மர்ம ஆசாமிகள் அவரது செல்போனை பறித்துக்கொண்டு, மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டனர். இதேபோல், அன்றிரவே ஊரப்பாக்கம் பெட்ரோல் பங்க் அருகில் கல்லூரி மாண வர் ஹரிஷ்(23) என்பவர் நடந்து வந்து கொண்டி ருந்தார். அப்போது அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரது கழுத்தில் இருந்த ஒரு சவரன் தங்க சங்கிலியை பறித்துகொண்டு சென்றனர்.


ஆண்டு முழுவதும்  நேரடி நெல்கொள்முதல்   விவசாயிகள் சங்க மாநாடு வலியுறுத்தல்

விழுப்புரம்,ஆக.9- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திண்டிவனம் வட்டக்குழு மாநாடு, திண்டிவனத்தில் நடைபெற்றது, மாநாட்டிற்கு ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார், தனபால்  சங்க கொடி ஏற்றி வைத்தார்.சுந்தர் வேலை அறிக்கையை வசித்தார், பார்கவுண்சில் ஏ.கோதண்டம் கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து தொடக்க உரையாற்றினார், மாநாட்டில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.டி.முருகன்  நிறையுரை ஆற்றினார்,   சிபிஎம் வட்டச் செயலாளர் டி.ராமதாஸ்வாழ்த்தி பேசினார், மாநாட்டில் ஆண்டு முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட வேண்டும், வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன் ஏரி குளங்களை தூர்வார வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 21 பேர் கொண்ட திண்டிவனம் வட்டக்குழுவிற்கு  தலைவராக செல்வராஜ், செயலாளராக ராமகிருஷ்ணன், பொருளாளராக சுந்தர் ஆகியோர் வட்டக் குழு தேர்வு செய்யப்பட்டனர்.


விலையில்லா சைக்கிள்

காஞ்சிபுரம், ஆக.9- காஞ்சிபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அந்திரசன் பள்ளியில் 456 மாணவர்களுக்கும், தாமல்வார் தெரு பகுதியில் அமைந்துள்ள மரியா அக்ஸிலம் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 159 மாணவிகளுக்கும், எஸ்எஸ்கேவி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 292 மாணவிகளுக்கும் மொத்தம் 907 சைக்கிள்களை எழிலரசன் எம்எல்ஏ வழங்கினார். காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


மாமல்லபுரம் புராதன சின்னங்களை ஒரே நாளில் பார்த்த 10 ஆயிரம் பேர்

சென்னை, ஆக.9-  இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆனதையொட்டி ஒன்றிய அரசு கடந்த 5-ந்தேதி முதல் வருகிற 15-ந்தேதி வரை 11 நாட்களுக்கு இந்தியா முழுவதும் புராதன சின்னங்களை கண்டுகளிக்க இலவச அனுமதி வழங்கியுள்ளது.   ஞாயிறன்று விடுமுறை தினம் என்பதால் மாமல்லபுரத்துக்கு குடும்பம், குடும்பமாக வந்திருந்த சுற்றுலா பயணிகள் வெண்ணெய் உருண்டைக்கல், அர்ச்சுனன் தபசு, ஐந்துரதம், கடற்கரை கோவில் உள்ளிட்ட புராதன சின்னங்களை பார்த்து ரசித்தனர்.


 

;