districts

சென்னை விரைவு செய்திகள்

மலை மீது  தீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலை, நவ. 19 - உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை (நவ. 19) அதிகாலை 3.40 மணிக்கு கோயில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்பட்டது. தீப விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மலையைச் சுற்றுவதற்கு பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நீதிமன்ற தலையீடு காரணமாக குறை வான அளவு மக்கள் மலை சுற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.  இந்நிலையில், மலையை சுற்றி வந்த பொதுமக்களிடம்  முன் அனுமதிச்சீட்டு உள்ளதா என காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். திருவண்ணாமலை யிலிருந்து சென்னை, விழுப்புரம், புதுச்சேரி செல்லும் சாலைகள் கனமழை காரணமாக பழுதடைந்துள்ளது.  எனவே சென்னை செல்லும் பேருந்துகள், அவலூர்பேட்டை, வந்தவாசி மற்றும், போளூர், ஆரணி வழியாகவும் விழுப்புரம், புதுச்சேரி செல்லும் பேருந்துகள் திருக்கோயிலூர் வழியாகவும் மாற்று வழியில் செல்ல வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது.

கிராமங்கள் துண்டிப்பு

விழுப்புரம்,நவ.20- கனமழை காரணமாகவும், சங்கராபரணி ஆற்றில் வெள்ள நீர் வழிந்தோடுகிறது. இதனால் இதன் குறுக்கே அமைந்துள்ள புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் வில்லி யனூர் ஆரியப்பாளையம் ஆற்றுப்பாலத்தைத் தொட்டு வழியும் நிலையில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக இந்தப் பாலத்தின் வழியாகப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

சங்கராபுரத்தில் வாலிபர்கள் ஆர்ப்பாட்டம்

சங்கராபுரம்,நவ.20- கோவை மாணவி தற்கொலைக்கு நீதி கேட்டும், திரைக் கலைஞர் சூர்யாவை எட்டி உதைத்தால் 1 லட்சம் ரூபாய் பரிசு என அறிவித்த மயிலாடுதுறை பாமக மாவட்டச் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சங்கராபுரம் வட்டகுழு சார்பில் சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  வட்டத் தலைவர் க.பாஸ்கர் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் வே.ஏழுமலை, வட்டச் செயலாளர் ஆர்.வெங்கடேசன், பொருளாளர் பிரபாகரன், நிர்வாகிகள் முரளி, ராஜ்குமார், முனுசாமி, சங்கர் உள்ளிடோர் பங்கேற்று உரையாற்றினர்.
 

;