districts

சென்னை விரைவு செய்திகள்

போதை மறுவாழ்வு மையத்தில் வாலிபர் மர்ம மரணம்

சென்னை, மே 3- சென்னை ராயப்பேட்டை டாக்டர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் ராஜி (45). இவர் ஆட்டோவுக்கு பாடி கட்டும் வேலை செய்துவந்தார். சில ஆண்டுகளாக குடிப்பழக்கத்துக்கு ஆளாகிய ராஜி அப்பழக்கத்திலிருந்து விடுபட சிகிச்சை பெற்று  வந்தார். திங்கட்கிழமை ராஜ் மது அருந்தியிருந்த நிலையில்,  மனைவிகலா வுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து   மனைவி கலா மற்றும்  குடும்பத்தினர்  ராயப் பேட்டை பகுதியில் உள்ள  “மெட்ராஸ் கேர் சென்டர்”  என்ற போதை மறுவாழ்வு மையத்திற்கு ராஜியை  அழைத்து சென்றனர். இந்நிலையில் செவ்வாய் கிழமை (மே 3) அதிகாலை 2 மணிக்கு ராஜி உயிரிழந்து விட்டதாக அந்த   மையத்தினர் மனைவி கலாவிற்கு தகவல் அளித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த கலா மற்றும் குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்த போது ராஜியின் உடலில்  ரத்த காயங்கள் இருப்பதை யும்  பற்கள் உடைக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்த தையும் பார்த்தனர்.  இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அண்ணாசாலை காவல் நிலையத்தினர் ராஜியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராயப் பேட்டை அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போதை மறுவாழ்வு மையத் திற்கு சென்று விசாரணை  நடத்தினர். ராஜியின் உடல் முழுவதும் பிரம்பால் அடிக்கப்பட்ட தடயங்கள் இருந்ததுடன் அவரது தலையில் பலத்த காயம் இருந்ததால், மேலாளர் மோகன் மற்றும்  ஊழியர்களான ஜெகன்  (24), பார்த்தசாரதி (23) ஆகியோரை காவல் நிலை யம் அழைத்து சென்று விசா ரணை  நடத்தினர். மேலும்  தலைமறைவாக உள்ள  போதை மறுவாழ்வு மையத் தின் உரிமையாளர் கார்த்தி கேயனை காவல் துறையி னர் தேடி வருகின்றனர்.

பேருந்து நிழற்குடை அமைவதை தடுக்கும் சாதி ஆதிக்க சக்திகள் மாவட்ட ஆட்சியர் தலையிட வலியுறுத்தல்

திருவள்ளூர், மே 3 திருவள்ளூரை அடுத்த விஷ்ணுவாக்கத்தில் பேருந்து நிழற்குடை அமைக்க நிதி ஒதுக்கிய பிறகும்,  பணிகள் துவங்காமல் இருப்பது குறித்து விசாரித்து  நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று  மாவட்ட ஆட்சியரை  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது. திருவள்ளூர் அருகில் உள்ள விஷ்ணுவாக்கம் மற்றும் பேரத்தூர் ஊராட்சிகளில்  5000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இம்மக்கள் சாலையோரம் பேருந்து நிறுத்த நிழற்குடை இல்லாமல் பல ஆண்டுகளாக   மழை,  வெயில் காலங்களில் மரத்தின் ஓரம் ஒதுங்கும் நிலை உள்ளது. இந்நிலையில்  பேருந்து நிழற்குடை அமைக்க வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராடி வருகிறார்கள். போராட்டம் தீவிரமாகும்போது வருவாய்த்துறை, வட்டார வளர்ச்சித் துறை அதிகாரிகள் தலையிட்டு நிழற்குடை அமைக்கப்படும் என எழுத்து பூர்வமாக  உறுதியளிப்பதும், பிறகு பணியை கிடப்பில் போடுவதும் வாடிக்கையாகிவிட்டது. நிழற்குடை அமைந்தால் அங்கு தலித் மக்கள் வந்து அமருவார்கள். அதை பொறுத்துக்கொள்ள முடியாத சாதி ஆதிக்க சக்திகள் நிழற்குடை அமைவதற்கு தடையாக  உள்ளன. எனவே இந்த விஷயத்தில்  மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று  கட்சியின்  திருவள்ளூர்  மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால் மனு  அளித்துள்ளார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.பன்னீர்செல்வம், ஆர்.தமிழ்அரசு, வட்டக் குழு உறுப்பினர் எஸ்.கலையர சன், பேரத்தூர் கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் ஆகியோர் அப்போது உடனிருந்தனர்.

நெல் கொள்முதல் நிலையங்களில் அமைச்சர் சக்கரபாணி ஆய்வு

காஞ்சிபுரம், மே 3- 286 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்குகள் ரூ.96 கோடி செலவில் புனரமைப்பு செய்யப்படும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் அருகே சிறு காவேரிப்பாக்கத்தில் ரேசன் கடையை ஆய்வு செய்தபின்னர் செய்தியாளர்களிடம் அவர்  பேசுகையில்,  சிறு காவேரிப்பாக்கத்தில் அமைந்துள்ள சேமிப்பு கிடங்கினை ரூ.2.5 கோடி செலவில் புனரமைப்பு பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து நியாய விலைக் கடைகளும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் என்றார்.

மீஞ்சூரில் கடும் அனல் குடிசை எரிந்து சாம்பல்

திருவள்ளூர், மே 3- திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் லால் பகதூர் சாஸ்திரி தெருவில் செவ்வாயன்று (மே 3) காலை முனியம்மாள் என்பவருக்கு சொந்தமான குடிசை வீடு தீப்பற்றி முழுமையாக எரிந்து சாம்பலானது. இதனால் வீட்டில்  இருந்த அனைத்து பொருட்களும் முழுவதுமாக எரிந்து சேதம் அடைந்து விட்டது.எனவே கணவரை இழந்து,  உடமை கள் ஏதும் இல்லாமல்  தவிக்கும் அந்த குடும்பத்திற்கு அரசு  வழங்கும் உதவித்தொகையை வழங்கிட வேண்டி அப்பகுதி  மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

புதுவை நகரில் நாடக அரங்கம் அமைக்க வலியுறுத்தல்

புதுச்சேரி,மே.3- புதுச்சேரி நகரத்தில் கலைஞர்களின் தனித்துவத்தை வெளி காட்டுவதற்கு நாடக அரங்கை ஏற்படுத்தித்தர வேண்டுமென்று முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநாடு புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது. முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் புதுச்சேரி நகரக் கிளை அமைப்பு மாநாட்டை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மதிப்புறு தலைவர் ச.தமிழ்ச்செல்வன் துவக்கி வைத்து உரையாற்றினார்.  முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் புதுச்சேரி தலைவர் வீர.அரிகிருஷ்னன், பொருளாளர் ம.கலியமூர்த்தி மற்றும் துணைத் தலைவர்கள் வில்லியனூர் பழநி, பாவலர் சண்முக சுந்தரம், சு.கோவிந்தராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். புதுச்சேரி நகரப்பகுதியிலுள்ள கலைஞர்களின் திறமையை வெளிப்படுத்த நாடக கலை அரங்கு புதுச்சேரி அரசின் கலை பண்பாட்டுத்துறை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சங்கத்தின் நகர தலைவராக அ.ஹேமாவதி, செயலாளராக, ச.அன்பழகன், பொருளாளராக நாராயண சாமி ஆகியோர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

தனியார் பள்ளி ஆசிரியர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது

கடலூர், மே.3-  கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்களின் போராட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்திலுள்ள புனித வளனார் தொடக்கப் பள்ளியில்  20 ஆண்டுகளுக்கு மேலாக பேருந்து ஓட்டுநர்களாக வேலை செய்து வந்த மணி, அந்தோணி ஆகியோரை பள்ளி நிர்வாகம் எந்தவித முன்னறிவிப்புமின்றி பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது இந்த உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தியும், கொரோனாவை  காரணம் காட்டி ஆசிரியர்களுக்கு பாதி சம்பளம் வழங்கப்பட்டு வருவதை கண்டித்தும்,  முழு சம்பளம் ஊதிய உயர்வு வழங்க வேண்டியும் அந்த பள்ளியின் ஆசிரியர்களும் பணியாளர்களும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனையடுத்து, காவல் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் தலையிட்டு, கோட்டாட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர். அதன் அடிப்படையில் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமையில் பள்ளி நிர்வாகம், கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் பங்கேற்ற அமைதிக் கூட்டம் நடைபெற்றது.  இதில், 2 ஓட்டுநர்களையும் உடனடியாக பணியில் சேர்த்துக் கொள்வது என்றும் ஏப்ரல் மாதத்திலிருந்து ஆசிரியர்களுக்கு முழு ஊதியம் வழங்குவது என்றும் ஒப்பந்தமானது. இதனையடுத்து, போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

அதிகாரியை தாக்கிய தலைவரை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை

கடலூர்,மே.3- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எல்.ஹரிகிருஷ்ணன் கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு மனு ஒன்றை அனுப்பி யுள்ளார். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி ஊராட்சி ஒன்றியம், கண்டமங்கலம் ஊராட்சியில் மே 1 அன்று கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் மீது இன துவேஷத்துடன் துணைத் தலை வர் சரண்யா நடந்துகொண்டுள்ளார். மேலும், பொது மக்கள் முன்னிலையில் ஜனநாயக மாண்புகளையும்  மீறி, மிகவும் அநாகரிகமாகவும், காட்டு மிராண்டித்தனமாகவும் செருப்பால் அடித்து அராஜகத்தில் ஈடுபட்டிருக்கிறார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதாலேயே இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது. எனவே சம்மந்தப்பட்ட ஊராட்சி துணைத் தலைவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் மீது வழக்குப் பதிவு செய்து ஜாமீனில் வர முடியாத வகையில் நடவடிக்கை எடுத்து தக்க தண்டனை வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.