districts

சென்னை முக்கிய செய்திகள்

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார்  முதல்வர் ரங்கசாமி


சென்னை, மே 13- புதுவை முதல்வர் ரங்கசாமிக்கு அளிக்கப்பட்ட தொடர்  சிகிச்சையால் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற் பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. புதுவை முதல்வராக ரங்கசாமி கடந்த 7ஆம் தேதி பதவி யேற்றார். பதவியேற்புக்கு முந்தைய தினமே அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து பதவியேற்புக்கு பிறகும் ரங்கசாமி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டார். 9ஆம் தேதி அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்  பட்டது. அதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்ததில் அவருக்கு கொரோனா தொற்று தீவிரம் குறைவாகவும், உடல்நிலை சீராகவும் இருந்தது. தொடர் சிகிச்சையால் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் வருகிற 16ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ரங்க சாமி புதுவைக்கு திரும்புகிறார். புதுவைக்கு திரும்பினாலும் வீட்டு தனிமையில் மேலும் சில நாட்கள் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

தூத்துக்குடி, மே 13 தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் உடனடியாக  கரை திரும்ப வேண்டும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்  அறிவுறுத்தியுள்ளார். இந்திய வானிலை எச்சரிக்கை கணிப்பின்படி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தென்கிழக்கு அர பிக்கடல் பகுதியில் மே 14 ஆம் தேதி உருவாகி வடக்கு மற்றும் வடமேற்கு பகுதி தென்கிழக்கு அரபிக்கடல் பகுதி யில் நகர தொடங்குகிறது. இந்த குறைந்த காற்றழுத்த  தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று மே 16 அன்று மத்திய அர பிக்கடல் வழியாக செல்கிறது.  இதனால் லட்சத்தீவு, கேரளா மற்றும் தென் தமிழ்நாடு  பகுதியில் மே 14 முதல் இடி மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.  எனவே, மீனவர்கள் உடனடியாக கரைதிரும்ப  கேட்டுக்கொள் ளப்படுகிறது. மேற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தொழிலுக்கு சென்ற மீன்பிடி படகுகளை மீன்பிடி துறைமுகம் அல்லது பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவு றுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சி யர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் ஆக்சிஜன் உற்பத்தி

திருநெல்வேலி, மே 13- மகேந்திரிகிரி இஸ்ரோ மையத்தில் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை மாவட்ட ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டார் . திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையிலும் ஆக்சிஜன் தேவை அதிக ரித்துள்ளது. இந்நிலையில் காவல்கிணறு மகேந்திரகிரி  இஸ்ரோ மையத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி மையத்தில்  கூடுதலாக ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வேண்டும்  என திருநெல்வேலி மக்களவை உறுப்பினர் சா.ஞான திரவியம் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் ஆக்சிஜன் உற்பத்தி  செய்யப்பட்டு 8 டன் ஆக்சிஜன் திருநெல்வேலி அரசு  மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.  இந்நிலையில் இஸ்ரோவில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்ப டும் மையத்தை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வே. விஷ்ணு ஆய்வு செய்தார்.

சொத்துப் பிரச்சனையில் ஒருவர் கொலை

திருவில்லிபுத்தூர், மே 13- இராஜபாளையம் ஆவரம்பட்டி பெருமாள் கோவில்  தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (45).  இவருக்கும் இவரது அக்காள் மகன் கார்த்திக் வயது 29 என்பவருக்கும் சொத்துப் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் புதன்கிழமை  இரவு பத்து மணிக்கு  பெருமாள் கோவில் தெருவில் நடந்து வந்து கொண்டிருந்த கணேசனிடம் கார்த்திக் தகராறு செய்த தாகக் கூறப்படுகிறது.  அப்போது அருகில் கிடந்த  கல்லை எடுத்து கணேசன் தலையில் கார்த்திக் போட்டுள்ளார். இதில் கணேசன் பலி யானார். இராஜபாளையம் வடக்கு காவல்துறையினர் கார்த்திக்கை கைது செய்தனர்.


 

;