districts

சாதி, மதங்களை பெருமையாகப் பார்க்க வேண்டும்

“அனைத்து மக்களும் சமம் என்ற நிலை வர வேண்டும். அதற்காகத்தான் பாமக போராடு கிறது. சாதியை ஒழிக்க முடியாது. சாதியையும் மதங்களையும் பெருமையாக பார்க்க வேண்டும். அதில் பல நல்ல விஷயங்கள் உள்ளன. சாதியில் அழகான வழிமுறைகள் இருக்கிறது,  பழக்க வழக்கங்கள் இருக்கிறது. மதத்தில் எவ்வளவோ நல்ல பழக்க வழக்கங்கள் இருக்கிறது. இதையெல்லாம் நாம் கடைபிடிக்க வேண்டும். இதையெல்லாம் நாம் பெருமையாகப் பார்க்க வேண்டும். சாதி என்று சொன்னாலே ஏதோ கெட்டவார்த்தை போல பார்க்கிறார்கள். சாதியில் என்ன கெட்டவார்த்தை இருக்கிறது? சாதி என்பது ஒரு அழகிய சொல்” என்று பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.