districts

img

புற்றுநோய் விழிப்புணர்வு தடகளப் போட்டி

கிருஷ்ணகிரி,பிப்.4- ஓசூரில் அந்திவாடி ஸ்டேடியம் வாக்கர்ஸ் அசோசியேசன் சார்பில் அரசு விளை யாட்டு மைதானத்தில் பள்ளி மாணவர்களுக் கிடையே புற்று நோய் தடுப்பு விழிப்புணர்வு தடகளப் போட்டிகள் இரண்டு நாட்கள் நடை பெற்றது.  இதில் 140 அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 1200 மாண வர்கள் பங்கேற்றனர். 12, 14, 16, 18 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டது. பின்னர், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பெண்கள் பிரிவில் டைட்டன் பள்ளி முதல் இடத்தை பிடித்து ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் மற்றும் கோப்பையை வென்றது. ஜான் போஸ்கோ மகளிர் மேல் நிலை பள்ளி இரண்டாம் இடத்தையும், அஞ்செட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மூன்றாம் இடத்தை பிடித்தது. அதேபோன்று ஆண்கள் பிரி வில் டைட்டான் பள்ளி முதல் இடத்தை யும்,அஞ்செட்டி அரசு மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடத்தையும், ராக் போர்டு மேல் நிலை பள்ளி மூன்றாம் இடத்தையும் பிடித்தன. மாவட்டத்தின் கடை கோடியான மலை கிராமங்கள் மட்டுமே உள்ள அஞ்செட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஒட்டு மொத்த சாம்பியன் பிரிவில் இரண்டு மற்றும் மூன்றாவது  இடத்தை பிடித்து சாதனை படைத்தனர்.