districts

img

சித்தாலப்பாக்கத்தில் பிரச்சாரக் கூட்டம்

தென்சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியனுக்கு வாக்கு கேட்டு செவ்வாயன்று (ஏப்.16) சித்தாலப்பாக்கத்தில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சோழிங்கநல்லூர் பகுதிச் செயலாளர் ப.ஜெயவேல் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.வனஜகுமாரி, மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ஆர்.சுரேஷ், பகுதிக்குழு உறுப்பினர்கள் கே.குணசேகரன், வடிவேல், திமுக மாவட்ட கவுன்சிலர் நா.வேதகிரி, காங்கிரஸ் மாவட்ட கவுன்சிலர் ஏழுமலை, ஒன்றிய தலைவர் பாரதி சங்கர், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் அ.லாரன்ஸ் உள்ளிட்டோர் பேசினர்.