திருத்தணி ஒன்றியம், தாடூர் ஊராட்சியில் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் அரக்கோணம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் ஜெகத்ரட்சகனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரிக்கப்பட்டது. தாடூர், தாடூர் காலனி, பகத்சிங் நகர், எல் என் கண்டிகை, இருளர் காலனி எல்என் கண்டிகை, இஎன் கண்டிகை, சத்யா நகர், தலையாரி தாங்கல் ஆகிய ஊர்களில் தீவிர வாக்கு சேகரிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொகுதி பொறுப்பாளர் பெருமாள், வட்ட செயலாளர் அந்தோணி, வட்டக்குழு உறுப்பினர் ஜெய வேல், சாமந்தி, கன்னியப்பன், கோபி, ரகுபதி, திமுக இளைஞர் அணி பொறுப்பாளர் தாடூர் கோதண்டன், சங்கர் ஆகியோர் பங்கேற்று வாக்கு சேகரித்தனர்.