districts

img

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே உள்ள ஆடுர் அகரத்தில் பிறந்து தமிழ் வளர்த்த கவிஞர்

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே உள்ள ஆடுர் அகரத்தில் பிறந்து தமிழ் வளர்த்த கவிஞர் தமிழ்ஒளியின் 100 வது பிறந்தநாள் விழா பண்ருட்டியில் மார்க்சிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் ஆர். உத்தராபதி தலைமையில் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.  பொதுவுடமை கொள்கையை தனது உயிர் மூச்சாக கொண்ட  கவிஞர் தமிழ்ஒளியை நினைவு கூர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கோ.மாதவன் பேசினார்.  நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி. உதயகுமார், வட்ட செயலாளர் எஸ்.கே. ஏழுமலை, மாவட்ட குழு உறுப்பினர் டி.கிருஷ்ணன், நகர குழு உறுப்பினர்கள்  சங்கர், ஆர்.ராஜேந்திரன், சி. பாண்டுரங்கன் உள்ளிட்ட பலர்  கலந்துக்கொண்டனர்.