districts

img

கடலூரில் நூல் வெளியீட்டு விழா

கடலூர்,ஆ க.12-

     ‘பெரியார் பிராமணர்கள் எதிரியா’என்ற தலைப்பில் சோழ. நாகராஜன் எழுதிய நூல் வெளியீட்டு விழா தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் கடலூர் புதுப்பாளையத்தில் நடைபெற்றது.

     முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இள.புகழேந்தி வெளியிட வளவ துறையன் பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்வுக்கு கிளைத் தலைவர் கோமதி தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் பால்கி, மாவட்டத் தலைவர் ராஜா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிரகாஷ் வரவேற்றார்.

     கவி.வெற்றிச்செல்வி சண்முகம், திராவிடராசன், சவிதா, கேத்ரின் ஆகியோர் நூல் குறித்து பேசினர். நிறைவாக சோழ.நாகராஜன் ஏற்புரை நிகழ்த்தினார்.