புதுச்சேரி, செப்.28- இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மாவீரன் பகத்சிங் 116 வது பிறந்த நாளையொட்டி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தின் பாகூர் கடைவீதியில் பகத்சிங் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து, “சாதி,மத மோதலற்ற மாண வர்-இளைஞர் சமூகம் படைப்போம்” என்பதை வலியுறுத்தும் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. கொம்யூன் தலைவர் அஜித், செயலாளர் ஜெய ராஜ், நிர்வாகிகள் மேடே, கௌதமன், இந்திய மாண வர் சங்க நிர்வாகிகள் பாபு, யுவராஜ்,காமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.