districts

img

பகத்சிங் நினைவு தினம்

கடலூர் மார்ச் 23- இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று தூக்கு கயிற்றை முத்தமிட்ட தியாகிகள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவு தினத்தையொட்டி இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் சார்பில் கடலூர் வட்டாட்சியர் அலு வலகத்தில் இருந்து பேரணி தொடங்கி மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் சின்னத்தம்பி, மாணவர் சங்க மாவட்டத் தலைவர் சிவானந்தம் தலைமை தாங்கி னார்கள். வாலிபர் சங்க மாவட்டச் செய லாளர் வினோத்குமார் வரவேற்றார். மாண வர் சங்க மாநிலத் தலைவர் அரவிந்த்சாமி, மாநில செயற்குழு உறுப்பினர் குமரவேல், வாலிபர் சங்க மத்தியக் குழு உறுப்பினர் செல்வராஜ் ஆகியோர் பேசினர். மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் லெனின் நன்றி கூறினார். ஒன்றிய, மாநில அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், கடலூர் மாவட்ட என்.எல்.சி நிறு வனத்தில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும், நிலம் கொடுத்த விவ சாயிகளின் வாரிசுகளுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும். சிப்காட், நெல்லிக்குப்பம் ஆலைகளி னால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும். கடலூர் மாவட்டத்தில் பெருகிவரும் புற்றுநோய் மரணங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தலைவர்கள் பேசினர். இதில் மாணவர் சங்க நிர்வாகிகள் செளமியா, ஆகாஷ், வாலிபர் சங்க நகர தலைவர் செந்தமிழ் செல்வன், ஒன்றிய நிர்வாகிகள் அரசன், கலைவாணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;