districts

img

பூம் பூம் மாட்டுக்காரர்களுக்கு பட்டா

கள்ளக்குறிச்சி,நவ.27- கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டை ஒன்றியம், செம்பியன்மாதேவி ஊராட்சி ஏ. புதூர் கிராமத்தில் பூம் பூம் மாட்டுக்காரர்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலை யில் ஓடை புறம்போக்கில் குடிசை அமைத்து வாழ்ந்து வருகிறார்கள்.  நீண்ட காலமாக வசித்து வரும் இந்த மக்களுக்கு நிரந்தரமாக இதே ஊராட்சி யில் அரசு சார்பில் குடிமனை பட்டா வழங்க வேண்டும். அவர்களது பிள்ளை களுக்கு இந்து ஆதியின் சாதிச் சான்று வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி நவ. 28 அன்று உளுந்தூர்பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், வட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் சாதிச் சான்று, குடி மனைப்பட்டா உடனடியாக வழங்க நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் உறுதியளித்தார். இதையடுத்து,போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த பேச்சு வார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.எம். ஜெய்சங்கர்,ஒன்றியச் செயலாளர் வி.ரகுராமன், கே.ஜெயமூர்த்தி. டி.பச்சையப்பன், கா,செல்வராஜ், கோ. ரங்கதுரை, முத்து, ஆகியோர் கலந்து கொண்டனர்.