விழுப்புரம்,செப்.20- விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்திற்குட்பட்ட தென்னமாதேவி கிராமம். இங்கு வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் குடிமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறி சமையல் செய்யும் போராட்டம் நடத்தினர். 37 மாற்றுத்திறனாளிகள் வசித்து வரு கின்றனர். இவர்களுக்கு சொந்த வீடு, மனைப்பட்டா எதுவும் இல்லாமல் ஒரே வீட்டில் 10 பேர் வரை அடைத்து கொண்டு வாழ்க்கை நடத்துகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு முதல்வர் அறிவிப்பையொட்டி, பட்டா கேட்டு முறையே கடந்த மே 29, ஜூன் 19 மற்றும் 23 அன்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, மீண்டும் ஆக.21 அன்று மனு கொடுத்தனர். மேலும், கிராம எல்லையில் உள்ள வெங்கடாஜலபதி நகர் உள்ளிட்ட சில இடங்களை அடையாளம் காட்டினர். ஆனால் அதிகாரிகள் கண்டு கொள்ள வில்லை. இந்த நிலையில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் கோலியனூர் ஒன்றிய தலைவர் எம்.மும்மூர்த்தி தலைமையில் விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தட்டு, முட்டு சாமான்கள், பழைய தகர பெட்டிகள், கிழிந்துபோன பாய், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் ஊன்றுகோலுடன் குடி யேறினர். இதையடுத்து, வட்டாட்சியர் தலை மையில் மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகளுடன் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்தார். இதையடுத்து தற்காலிகமாக போராட்டத்தை ஒத்தி வைத்தனர். இந்த போராட்டத்தில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ. கிருஷ்ணமூர்த்தி, சிபிஎம் வட்டச் செயலாளர் ஆர்.கண்ணப்பன் ஆகியோர் கலந்து கொண்ட னர்.