திருவண்ணாமலை,பிப்.8- இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான வங்கிக் கடனுதவி இணைப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், கூடுதல் ஆட்சியர் ரிஷப் ஆகியோர் ரூ. 104 கோடியே 7 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து, சுய உதவி குழுக்களுக்கான எக்ஸ்பிரஸ் வாகனத்தை மாவட்ட கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநில தடகள சங்க துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, மகளிர் திட்ட இயக்குநர் சரண்யா தேவி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வெற்றிவேல், முன்னோடி வங்கி மேலாளர் கௌரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழுப்புரம் விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் நடந்த நிகழ்வில் விழுப்புரத்தில் சிறு பான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், மாவட்ட ஆட்சியர் சி.பழனி ஆகியோர் கலந்து கொண்டு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். சட்டமன்ற உறுப்பினர்கள் நா.புகழேந்தி, இரா. லட்சுமணன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ம. ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.