districts

img

இதயம் ஆரோக்கியத்திற்கான விழிப்புணர்வு நடைபயணம்

சென்னை, அக். 30- இதயம் மற்றும் மூளை  ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத் தும் வகையில் நடைப் பயணம் சென்னையில் நடைபெற்றது. சென்னையில் உள்ள கிளெனீகல்ஸ் ஹெல்த்சிட்டி ஏற்பாடு செய்திருந்த இந்த பேரணியை நடிகர் பிரசன்னா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நடைபயணம் தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் துவங்கி பள்ளிக்கரணை காவல் நிலையம் வரை 4 கி.மீ. தூரம் நடைபெற்றது. இந்த நடைபயணத்தில்  ஆசான் மெமோரியல், சதக் கல்லூரி, இந்துஸ்தான் கல்லூரி உள்பட பல்வேறு கல்லூரியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாண வர்கள், சென்னை க்ளெ னேகிள்ஸ் ஹெல்த்சிட்டி யைச் சேர்ந்த பணியாளர்கள்  கலந்து கொண்டனர்.  இதயம் மற்றும் மூளை ஆரோக்கியம் குறித்த பற்றிய பல்வேறு தகவல் கள் அடங்கிய பதாகை களை பிடித்தபடி நடந்து சென்றார்கள்.