districts

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை,ஆக.25-

      பள்ளிக்கு மாணவர்களை அழைத்துச் செல்லும் ஆட்டோ ஓட்டுநர்களை முறையாக பள்ளிக்கு அழைத்து சென்று வருவது குறித்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை மையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்றது.

     இந்த நிகழ்ச்சிக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் டி.மாதவன் தலைமை தாங்கி  பேசியதாவது:-  

     பள்ளி மாணவர்களை ஆட்டோவிலிருந்து இறக்கும் போது ஓட்டுநர் இறங்கி அவர்களை பத்திரமாக அழைத்து சென்று வரவேண்டும். 12 வயதிற்குள் மேல் இருக்கும் மாணவர்கள் 5 பேரும், 12 வயதிற்கு 3 பேரை மட்டுமே ஆட்டோவில் ஏற்ற வேண்டும். ஏற்றப்படும் அனைத்து குழந்தைகளும் ஆட்டோவிற்குள் இருக்க வேண்டும்.   கட்டாயமாக ஓட்டுநர் அருகில் யாரையும் உட்கார வைக்க கூடாது. பள்ளிக்கு அழைத்துச் செல்லும் மாணவ, மாணவிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது. அதற்கு ஓட்டுநர்கள் தான் முழு பொறுப்பேற்க வேண்டும். ஆட்டோ ஓட்டுநர்கள் கட்டாயம் சீருடை அணிய வேண்டும். கட்டாயம் ஆர்.சி. புத்தகம், இன்சூரன்ஸ், மாசு கட்டுப்பாட்டு துறை சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் முறையாக பராமரித்து வைத்திருக்க வேண்டும். இல்லையேல் அபராதம் விதிக்கப்படும் என்றார்.