சென்னை, மார்ச் 3- தடைகளை தகர்த்து சாதனை படைத்த மாற்றுத்திறனாளிகளுக்கு சென்னையில் நடைபெற்ற விழாவில் கவின்கேர் எபிலிட்டி விருதுகள் வழங்கப்பட்டன. கவின்கேர் நிறுவனமும் எபிலிட்டி ஃபவுண்டேஷனுடன் இணைந்து ஆண்டுதோறும் மாற்றுத்திறனாளிகளை கவுரவித்த வருகிறது. பாடலாசிரியரும், கதை வசனகர்த்தாவுமான மதன் கார்க்கி, சாய் பல்கலைக்கழகத்தின் வேந்தர் கே.வி. ரமணி, திரைப்பட தயாரிப்பாளர் பரத் பாலா, எல்வி பிரசாத் ஊடக கல்லுரி முன்னாள் துறைத்தலைவர் லதா முருகன் ஆகியோரை உள்ளடக்கிய நடுவர் குழு விருதாளர்களை தேர்வு செய்தது. தடைகளை சமாளித்து, வெற்றி காண்பதில் அவர்களது திறன், அவர்களது சாதனைகளை நிகழ்த்துவதில் எதிர்கொண்ட சிரமங்களின் அளவு மற்றும் அவர்களது சாதனையின் தனித்துவ தன்மை ஆகிய அம்சங்களின் அடிப்படையில், இவ்விருதாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் கவின்கேர் தலைவர் சி.கே. ரங்கநாதன், எபிலிட்டி ஃபவுண்டேஷனின் நிறுவனர். ஜெயஸ்ரீ ரவீந்திரன், திரைக்கலைஞர் ரேவதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.