districts

வந்தே பாரத் ஐசிஎப் ஆலைக்கு விருது

சென்னை, ஆக. 22-

     ஐசிஎப் நிறுவனம் வந்தே  பாரத் திட்டத்திற்காக விருது பெற்றுள்ளது சென்னை ஐசிஎப் இந்திய  திட்ட மேலாண்மை நிறுவனத்திடம் இருந்து இந்தியாவின் முதல் அதிவேக ரயில் தொடரான வந்தே பாரத் ரயில் திட்டத் திற்கு 2023ஆம் ஆண்டின் நாட்டின் சிறந்த திட்டத்திற் கான விருதை பெற்றுள் ளது.

    இந்த விருது ஒவ்வொரு  ஆண்டும் இந்தியாவின் சிறந்த தொழில் திட்டங் களை தேர்ந்தெடுத்து வழங்கப்படுகிறது. இந்த விருதினை திங்க ளன்று (ஆக. 21) திட்ட மேலாண்மை நிறுவனத்தின் வருடாந்திர விருது விழா வில் தலைமை விருந்தின ராக பங்கேற்ற நிதி ஆயோக் நிறுவன இயக்கு நர் விஜய்குமாரிடம் இருந்து ஐசிஎப் பொது மேலாளர் பி.ஜி.மல்லையா பெற்றுக் கொண்டார்.

    இந்த ஆண்டு இந்த விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இதர நான்கு திட்டங்களில், இந்தி யாவின் உள்நாட்டு தயாரிப் பான விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் ஜம்மு காஷ்மீர் செனாப் ரயில் பால திட்டங்களும் அடங்கும்.