கிருஷ்ணகிரி,செப்.18 -
ஊத்தங்கரை அதியமான் மகளிர் கல்வியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது. அதியமான் கல்விக் குழுமங்களில் நிறுவனர் திருமால் முருகன் தலைமை தாங்கினார். கல்லூரியின் செயலாளர் ஷோபா திருமால் முருகன் ஒளி ஏற்றி துவக்கி வைத்து மாணவர்களை வரவேற்றார்.உதவி பேராசிரியர் உஷாராணி நன்றி கூறினார்.