ராணிப்பேட்டை, ஜூன் 26-
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வேலூர் மண்டலம் ஆற்காடு பணிமனையில் ஞாயிறன்று (ஜூன். 25) பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வு கால பணப்பயன் வழங்குதல் மற்றும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு குளிரூட்டப்பட்ட ஓய்வறையை திறப்பு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல். ஈஸ்வரப்பன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் (வேலூர்) முஹம்மது சகி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் எஸ்.ஜோசப் டயஸ், வேலூர் மண்டல பொதுமேலாளர் அ. கணபதி, நகர மன்றத் தலைவர்கள் தேவி பென்ஸ் பாண்டியன், முஹம்மது ஹமீன், ஒன்றியக் குழுத் தலைவர்கள் புவனேஸ்வரி சத்தியநாதன், சே.வெங்கட்ரமணன், தொமுச வேலூர் மண்டல பொதுச் செயலாளர்கள் ரமேஷ், சவுந்தர்ராஜன், தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர்(சிஐடியு) கே.ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வேலூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மண்டல அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணி யாளர்கள் மற்றும் பணியாளர்கள் வாரிசுதாரர்கள் என 214 பயனாளிகளுக்கு ஓய்வுக்கால பணப்பலன், ஓட்டுநர்களுக்கு ஓட்டுநர் கையேடு வழங்கினர். மேலும் அரசு போக்குவரத்து கழக ஆற்காடு பணிமனையில் ஓட்டுநர் மற்றும் நடத்து நர்களுக்கு குளிரூட்டப்பட்ட ஓய்வறை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர் திறந்து வைத்து பணப்பலன்களை வழங்கினர்.